சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது.
அந்த விதத்தில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்திய நாய்கள் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இப்படியான சூழ்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தொடர் யுத்தம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது ஆனாலும் அடுத்தடுத்த தினங்களில் பங்குச்சந்தைகளில் மதிப்பு உயர்ந்தது, தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து 119வது நாளாக இன்றைய தினமும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து ஒரே நிலையில் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.