தங்கத்தின் விலை… இன்று சவரனுக்கு ரூ. 776 உயர்வு!

by Column Editor

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 776 விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4873ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 97 உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,984-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 776 உயர்ந்து ரூ.39,760-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4970 விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.50-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.90 காசுகள் அதிகரித்து ரூ. 73.40-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 776 விலை உயர்ந்துள்ளது.

Related Posts

Leave a Comment