ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜேவாக இருந்த பாலாஜி, தற்போது பன்முக திறமைக் கொண்ட கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் காமெடி கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும், சத்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளளது. அதன்படி தீயன்‘ படத்தை இயக்கிய ஜியன் கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கவுள்ளார். ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷமன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையடுத்து வரும் 23-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.