உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமாக உள்ள நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்புக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் ரஷ்யா , உக்ரைன் மீது தொடுத்துள்ள போருக்கு எதிராக குரல் கொடுத்து உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருகிறது.
இதனிடையே போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடந்த 28ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. உடனடியாக ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில் உடன்பாடு இல்லாததால் தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பெலாரஸில் உள்ள கோமலில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் பங்கேற்கின்றன.உக்ரைன் தலைநகர் கீவ்வில் உளவு அலுவலகங்களுக்கு அருகே வசிக்கும் வசிப்பவர்கள் உடனடியாக அப்பகுதிகளை விட்டு வெளியேறி அறிவுறுத்தியுள்ளது. கீவில் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்கிவையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.