இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நேற்றைய காட்டிலும் இன்று உயர்ந்து காணப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மக்களை வாட்டி வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலையில் மக்கள் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் , பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய ,மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மூன்றாம் அலை பெரிய அளவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் நான்காவது அலை வருகிற ஜூன் மாதம் தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,554 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 8,013 பேர், நேற்று 6,915 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி பாதிப்பு இன்று உயர்ந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 223 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று 180 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கையும் உயர்ந்தே காணப்படுகிறது.இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,14 246 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து குணமானவர்களின் 14,123 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,33,84,673ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 85,680ஆக குறைந்துள்ளது. இதுவரை 177.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.