பிப்ரவரியில் சறுக்கிய ஜி.எஸ்.டி. வருவாய்.. முதல் 11 மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.13.45 லட்சம் கோடி..

by Column Editor

இந்த நிதியாண்டில் (2021-22) முதல் 11 மாதங்களில் (2021ஏப்ரல்-2022 பிப்ரவரி) ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.13.45 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,33,026 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. வரி ரூ.24,435 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. வரி ரூ30,779 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வரி ரூ.67,471 கோடியும் (இறக்குமதி பொருட்கள் மீதான வரி வசூல் ரூ.33,837 கோடியும் உள்பட), செஸ் ரூ.10,340 கோடியும் அடங்கும். கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,38,394 கோடி வசூலாகியுள்ளது.

இந்த நிதியாண்டில் (2021-22) முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) ஜி.எஸ்.டி. வாயிலாக ரூ.13.45 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது. ஜி.எஸ்.டி. வசூல் நிலவரம் திருப்திகரமாக இருப்பது மத்திய அரசு ஆறுதல் அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வசூல் முதல் 11 மாதங்களில்

ஏப்ரல் ரூ.1,41,384 கோடி
மே ரூ.1,02,709 கோடி
ஜூன் ரூ. 92,849 கோடி
ஜூலை ரூ.1,16,393 கோடி
ஆகஸ்ட் ரூ.1,12,020 கோடி
செப்டம்பர் ரூ.1,17,010 கோடி
அக்டோபர் ரூ.1,30,127 கோடி
நவம்பர் ரூ.1,31,526 கோடி
டிசம்பர் ரூ.1,29,780 கோடி
ஜனவரி ரூ.1,38,394 கோடி
பிப்ரவரி ரூ.1,33,026 கோடி
———————-
ரூ.13,45,218 கோடி

Related Posts

Leave a Comment