கொச்சி மெட்ரோ ரயிலில் மகளிர் தினத்தன்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” தங்களின் ஈடு இணையற்ற உழைப்பால், அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றும், இப்பூமிப்பந்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கிறார்கள்.தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். இத்தகைய பெருமைக்குரிய பெண்ணினத்தை போற்றும் வகையில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மகளிர் தினத்தை ஒட்டி முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. மெட்ரோ நிறுவனம் , பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் எந்த நிலையத்திற்கும் இலவசமாக ஏறி இறங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இதுதவிர 8ஆம் தேதி 10 முக்கிய மெட்ரோ நிலையங்களில் பெண் ஊழியர்கள் மட்டுமே நிலையை கட்டுப்பாட்டாளர்களாக இருப்பார்கள் என்றும் பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.