உக்ரைனில் போர் எதிரொலியாக தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்த நிலையில் கடந்த 2 நாட்களாக குறைந்து காணப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நேற்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.37,904 விற்பனையானது.அதேபோல் நேற்றுமுன்தினம் மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 69 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் உக்ரைனில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.75 உயர்ந்து ,ரூ.4,813 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 600 உயர்ந்து ரூபாய் 38,504 விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 1.10 ரூபாய் உயர்ந்து ரூ.70.10 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்துள்ள செய்தி சாமானிய மக்களுக்கும், நகை பிரியர்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.