கோவக்காய் பிரட்டல் செய்வது எப்படி?

by Column Editor

நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.

உடலுக்கு நன்மை தரும் கோவக்காய் வறுவல் எப்படி செய்றதுன்னு தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை

கோவக்காய் – 250 கிராம்

உப்பு – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

மல்லி தூள் – 1/2 ஸ்பூன்

வேர்க்கடலை – 1/4 கப்

மசாலா தூள் அரைக்க

துருவிய தேங்காய் – 1/4 கப்

சிவப்பு மிளகாய் – 6

பூண்டு – 5 பற்கள்

பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

செய்முறை:

கோவக்காய் வறுவல் செய்ய முதலில் ஒரு மசாலா தூள் அரைக்க வேண்டும். ஒரு கடாயில் துருவிய தேங்காய், காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தேங்காயை வறுத்த பின்பு சிறிது நேரம் ஆறவிட்டு மிஸ்சியில் சேர்த்து இதனுடன் பூண்டு, பொட்டுக்கடலை சேர்த்து தூளாக அரைக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். கடுகு பொரிந்தவுடன் மெலிதாக நறுக்கிய கோவைக்காயை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கோவக்காய் வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்

இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து கோவக்காய் வறுவலை பரிமாறலாம்…

Related Posts

Leave a Comment