ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.
எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்.
ஸ்கொட்லாந்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள், ரஷ்ய வன்முறையின் அதிகரிப்பு ஆழ்ந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிலும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன, அங்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் பொலிஸார் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தனர்.
வியாழக்கிழமை உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய துருப்புக்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தலைநகர் கீவ்வை அடைந்தன.