சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்தது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்கு சந்தை சரிவு ஏற்பட ஏற்பட தங்கத்தின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் அதிரடியாக உயர்ந்தது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 568 குறைந்துள்ளது. கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து 4,738 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 37 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து ரூ.69க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 69 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
உக்ரைன் -ரஷ்யா போரால் நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் தற்போது இறங்கு முகத்தில் உள்ளது சாமானியர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.