வெயில் காலத்தில் மற்ற நாட்களை விடவும் அதிக பாதிப்புகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே சரியான ஸ்கின்கேர் முறைகளை தவறாது செய்தாக வேண்டும்.
சரும பாதுகாப்பு என்பது ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபடும். அதற்கேற்ப நமது சருமத்தை நாம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். எப்படி குளிர் காலத்தில் சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறோமோ அதே போன்று வெயில் காலங்களிலும் சில வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும். வெயில் காலத்தில் மற்ற நாட்களை விடவும் அதிக பாதிப்புகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே சரியான ஸ்கின்கேர் முறைகளை தவறாது செய்தாக வேண்டும். இல்லையேல் இவை நேரடியாக உங்களின் சருமத்தை பாதிக்க செய்து விடும். வெயில் காலத்தில் செய்ய வேண்டிய சரும பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
சன்ஸ்கிரீன் :
வெயில் காலம் வந்தவுடன் நீங்கள் அவசியம் வாங்கி வைத்து கொள்ள வேண்டிய புராடக்ட் சன்ஸ்கிரீன் லோஷன் போன்றவை தான். வெயிலில் செல்லும்போது தினமும் சன்ஸ்கிரீன் லோஷன் தடவ வேண்டும். சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மிகவும் வலிமையானவை. எனவே, இதனால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் மிகவும் அவசியம். இது புற்றுநோய் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றை தடுக்கும். மேலும் எஸ்.பி.எஃப் உள்ள புராடக்ட்களை பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.
கிளென்சிங் :
கோடை காலத்தில் வியர்வை அதிகம் வருவதால், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே உங்கள் தோலை பராமரிக்க கிளென்சரை பயன்படுத்துவது மிகவும் அவசியம். உங்களுக்கு வியர்க்க ஆரம்பிக்கும் போது, உங்கள் தோலில் அழுக்குகளும் நிறைந்திருக்கும். எனவே உங்கள் சருமத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் கிளென்சரானது அதிக படியான கெமிக்கல்ஸ் இல்லாததாக பார்த்து வாங்குங்கள். நீங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது கிளென்சர் பயன்படுத்துவது நல்லது.
சிரம் :
பலர் வெயில் காலங்களிலும் முகத்திற்கு எண்ணெய் அல்லது சிரம் பயன்படுத்துவார்கள். இது தவறான விஷயமாகும். ஏற்கனவே வெயில் நாட்களில் அதிக வியர்வை வந்து எண்ணெய் பசை மிகுதியாக இருக்கும். எனவே கூடுதலாக எண்ணெய் அல்லது சீரமை முகத்தில் பயன்படுத்தினால் இது மேலும் சில பாதிப்புகளை தரும்.
ஈரப்பதம் :
சருமத்தை எல்லா காலங்களிலும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும். சருமத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லையென்றால் பல்வேறு பாதிப்புகள் வர தொடங்கும். கரும்புள்ளிகள், சருமம் வறட்சி, கீறல்கள் போன்ற பாதிப்புகள் உருவாகும். எனவே, உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க மாயிச்சரைஸர் பயன்படுத்துங்கள். இது மென்மையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தரும். அதே போன்று நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு வாருங்கள்.
டோனர் : வெயிலில் செல்லும் போது முகத்தில் எந்த வித எரிச்சலும் இல்லாமல் இருக்க டோனர் மிக அவசியம். இவை சருமத்தில் உள்ள ph அளவை சீராக வைக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். அதே போன்று சருமத்தில் எண்ணெயை உற்பத்தி செய்யும் தோல் துளைகளை மூட, ஒரு நல்ல டோனர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.