டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விண்ணப்ப பதிவு நேற்று ( 23ஆம் தேதி) தொடங்கியது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். போட்டி தேர்வுகள் , நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானனவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
அந்தவகையில் இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 18-ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு நேற்று ( பிப்ரவரி23-ம் தேதி) தொடங்கியது. மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கக கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வானது முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு முன்பு ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும்( தமிழ்), 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு ஜனவரி மாதம் கலந்தாய்வு நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிரிவிக்கப்படுள்ளது. தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் apply.tnpscexams.in, www.tnpsc.gov.in இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
டிஎன்பிஎஸ் சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் முதலில் ஆதாரை பதிவு செய்ய வேண்டும். இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1230 வரை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.