இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 69 புள்ளிகள் சரிந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், என்.டி.பி.சி. மற்றும் எல் அண்ட் டி உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. பவர் கிரிட் நிறுவன பங்கின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,197 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,167 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 96 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.255.68 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.87 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.62 புள்ளிகள் குறைந்து 57,232.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 28.95 புள்ளிகள் சரிவு கண்டு 17,063.25 புள்ளிகளில் முடிவுற்றது.