இந்தியாவில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களை தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனர். இந்த சூழலில் மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது 1.28 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 13,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 278 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,12,622 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் ஒரேநாளில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31,377 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,21,89,887 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,64,522ஆக குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 1.28% குறைந்துள்ள நிலையில் இதுவரை 176.19 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.