பாக்கியாவிடம் கோபி, நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனியால ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் நிஜ முகத்தை பார்த்து ஜெனி ஷாக் ஆகுகிறார். அதுமட்டுமில்லை, பாக்கியாவின் நிலையை நினைத்து வருத்தப்பட்டு செழியனிடம் சண்டையும் போடுகிறார்.
விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் தொடங்கிய சீரியல் தற்போது எல்லா விஷயத்தை பற்றி பேசி வருகிறது. கணவர், பிள்ளைகளால் ஏமாற்றப்படும் பாக்கியா கடைசி வரை குடும்பத்திற்காக மட்டுமே யோசித்து, வாழ்ந்து வருவது போல் திரைக்கதை பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் இயக்குனர்ராதிகா டிராக்கை சீரியலில் அறிமுகம் செய்தார். கோபியின் முன்னாள் காதலியான ராதிகாவின் அறிமுகத்திற்கு பின்பு சீரியல் சூடுப்பிடிக்க தொடங்கியது.
முன்னாள் காதலியுடன் மீண்டும் பேசி பழக தொடங்கிய கோபி , இப்போது கல்யாணம் வரை சென்று விட்டார். முறைப்படி விவாகரத்து கிடைத்த உடனே ராதிகாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார் கோபி. இது இப்படி இருக்கையில் கோபி பற்றிய உண்மை அவரின் அப்பா ராம மூர்த்திக்கு தெரிந்து விட்டது. மொத்த உண்மையும் குடும்பத்திடம் அவர் சொல்ல நினைத்த போது முடக்குவாதம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.
இந்நிலையில், இவரின் மருத்துவ செலவுக்கு கோபியும் செழியனும் அடித்துக் கொள்கிறார்கள். எழில் தனது மொத்த சம்பள பணத்தையும் பாக்கியாவிடம் தந்து விட்டார். ஆனால் செழியன் அதிகமாக செலவு செய்ய முடியாது என முகத்திற்கு நேராக கூறிவிட்டார். இப்படி இருக்கையில் கோபியிடம் பணம் கேட்ட பாக்கியாவை அவர் அவமானம் படுத்தி வெளியே அனுப்புகிறார். மற்றவர்களை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்த பாக்கியா, கண்விழித்து வேலை பார்த்து மருத்துவ செலவுகளை கவனித்து கொள்கிறார். இதை பார்த்த ஜெனி வருத்தப்படுகிறார். பாக்கியாவின் நிலையை நினைத்து, செழியனிடம் போய் சண்டை போடுகிறார். ஆனால் வழக்கம் போல் செழியன் கோபத்தைக்காட்ட, ஜெனி திரும்பி வந்து விடுகிறார்.
அந்த நேரம் தான், கோபியின் உண்மையான குணம் ஜெனிக்கு தெரிய வருகிறது. கோபி, பாக்கியாவிடம் சிறிது பணத்தை கொடுத்து செலவுக்கு இனிமேல் காசு கேட்காதே என்று கூறி பாக்கியாவை திட்டுவதை ஜெனி பார்த்து விடுகிறார். இது ஜெனிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லை செல்வி அக்காவும், ஜெனியிடம் இதுதான் கோபியின் உண்மயான முகம் என போட்டு கொடுக்கிறார். மற்றவர்களிடம் அன்பாக பேசும் கோபி, பாக்கியாவிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனியால ஏற்றுக் கொள்ள முடியவில்லை.