பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து தற்காலிக கொவிட் சட்டங்களும், அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, பொது இடங்களில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கொண்டு செல்லுதல், கல்வி நிலையங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் ஆகியவை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் முடிவுக்கு வரும்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தடுப்பு என்பதை அரசின் கட்டாயத்தின் பேரிலான நடவடிக்கை என்பதிலிருந்து தனிநபரின் பொறுப்பாக மாற்றும் எனது உத்தியின் ஒரு பகுதியாக தற்காலிக சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும். இதன்மூலம் நமது சுதந்திரத்தை இழக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இப்போதைய நடைமுறை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கும்.
அதன்பிறகு யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், காய்ச்சல் இருந்தால் எவ்வாறு சுய பொறுப்புடன் நடந்துகொள்வார்களோ அதன்படி நடந்துகொள்ள ஊக்குவிக்கப்படுவர். அவர்களுக்கு சுய தனிமை தேவையில்லை.
கொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமையில் இருப்பதற்கான சட்டரீதியான தேவைகளும் முடிவுக்கு வரும். மிக அதிக நோய் எதிர்ப்புத் திறன், உயிரிழப்பு குறைவு காரணமாக இந்தக் கட்டுப்பாடுகளை அரசால் நீக்க முடிகிறது’ என கூறினார்.