24 ஆம் தேதி வரை தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும்? – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

by Editor News

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரள கடலோரப் பகுதிகளுக்கு மேலே நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, 20 ஆம் தேதியான இன்று தென் தமிழகம் மற்றும் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21 ஆம் தேதியான நாளை தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23 ஆம் தேதியை பொருத்தவரையில் தென்தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். 24 ஆம் தேதியை பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment