இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாடி வந்தது. இதில், இந்திய அணியை அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், கடைசி 3வது டி20 போட்டியானது இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இன்றைய கடைசி போட்டியை பொறுத்த வரையில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதனால் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஸ்ரேயாஸ் ஐயர் தனது புதிய ஐபிஎல் அணியின் மைதானத்தில் களம் காண்கிறார்.
மேலும், பந்துவீச்சை பொறுத்தவரையில் இந்திய அணி பல மாற்றத்தை கொண்டு வர உள்ளது. முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இதே போன்று சுழற்பந்துவீச்சிலும் சாஹலுக்கு பதிலாக குல்தீப் களமிறங்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிப்பெற பல முயற்சிகளை கையாளப்போகிறது.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 44 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைக்க உள்ளார். இதுவரை குப்தில் 3299 ரன்களுடனும் முதலிடத்திலும், விராட் கோலி 3296 ரன்களுடனும் 2வது இடத்திலும், ரோகித் சர்மா 3256 ரன்களுடனும் உள்ளார்கள்.