கண்ணம்மா என்ன உண்மையை சொல்ல போகிறார் என்ற குழப்பத்தில் சவுந்தர்யா தவிக்கிறார்.
இத்தனை நாட்களாக கண்ணம்மா பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவாரா? லட்சும் அப்பா இவர்தான் என்ற உண்மையை சொல்வாரா? என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க இன்றைய எபிசோடில் பாரதிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து அதகளம் செய்கிறார் கண்ணம்மா.
வாரத்திற்கு ஒரு ட்விஸ்ட் கட்டாயம் என்ற உறுதி மொழியுடன் கண்ணம்மா சீரியலை வழங்கு கொண்டிருக்கிறார் சின்னத்திரை டாப் இயக்குனர் பிரவீன். இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸ் என்றால் சும்மாவா? என்ன கொடுத்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது இவருக்கு நன்கு தெரிந்த விஷயம். அதை வைத்து கொண்டு அரைச்ச மாவாக இருந்தாலும் பரவாயில்லை அதை புளிக்க விடாமல் வெரைட்டியாக தந்து கொண்டிருக்கிறார். போன மாசம் பாரதியும் கண்ணம்மாவும் மறுபடியும் சேர்கிறார்கள் என்ற புரமோவை போட்டு மக்களை ஆர்வமாய் வைத்திருந்தவர் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்து இருவரையும் பிரிந்து விட்டார்.
போன வாரம் முழுக்ககண்ணம்மா சபதம், பிறந்த நாள் கொண்டாட்டம் என அடுத்தடுத்த திருப்பங்களை தந்தார். வரும் வாரத்தில் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை தான் என்ற உண்மையை வைத்து சீரியலை ஓட்ட போகிறார் என்பது இன்றைய எபிசோடு மூலம் தெரிய வந்துள்ளது. இத்தனை நாட்களாக பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவாரா? மாட்டாரா? என குழப்பத்தில் இருந்தார் கண்ணம்மா. அதுமட்டுமில்லை பாரதியை தேடி தேடி போய் லட்சுமி ஆசைக்காக வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று, நிலைமையே வேற. சவுந்தர்யாவிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு நேராக பாரதியை பார்க்க செல்கிறார்.
அந்த நேரம் பார்த்து வெண்பா அங்கு இருக்க, வழக்கம் போல் வெண்பாவை அசிங்கப்படுத்தி கலாய்க்கிறார். பின்பு பாரதியை போய் பார்த்து ஒரு முக்கியமான ரகசியத்தை பிறந்த நாள் விழாவில் சொல்ல போவதாக கூறி பாரதிக்கு அதிர்ச்சி தருகிறார். என்ன ரகசியம்? என்று பாரதிக்கு ஆர்வம் கூடுகிறது. அதே போல் கண்ணம்மாவின் இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் எனவும் குழப்பம் வருகிறது. வந்த விஷய்சத்தை சொல்லிவிட்டு கண்ணம்மா கிளம்புகிறார். வழக்கம் போல் பாரதியை ஏற்றிவிடுகிறார் வெண்பா.
இந்த பக்கம், கண்ணம்மாஎன்ன உண்மையை சொல்ல போகிறார் என்ற குழப்பத்தில் சவுந்தர்யா தவிக்கிறார். இந்த நேரத்தில் தான் பாரதி, ஹேமாவை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியே சென்ற உண்மை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் அனைவருக்கும் ஷாக். ஒருவேளை பாரதி ஐதராபாத் கிளம்பி விட்டாரோ என்று சந்தேகம் வருகிறது.
மறுப்பக்கம் கண்ணம்மாவும் லட்சுமியும் பிறந்த நாள் விழாவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு பாரதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்து என்ன நடக்கும்? என்பது வரும் வாரத்தில் தெரிந்து விடும்.