இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்கள் போராடுவதை பற்றி இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி முதல் டி 20 போட்டியில் தோழ்வியை தழுவியது. இந்த போட்டியில், அறிமுகமான இளம் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் 17 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மேற்கிந்திய அணியை 157 ரன்களை வீழ்த்தியதில் மிகுந்த நல்ல விஷயம்.
இதற்கு முழு பெருமையும் எங்கள் பந்துவீச்சாளர்களையே சேரும். பேட்டிங்கை பொறுத்தவரை நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும். ஆனால், நாங்கள் தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம்.
எங்களுடைய முழு கவனமும் இப்போ டி20 உலககோப்பை மீதே உள்ளது. இளம் வீரர் ரவி பிஸ்னாய் திறமையான வீரர். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பவர்பிளே மற்றும் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.
இதனால் தான் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இனி அவரை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில் தான் உள்ளது எனக்கூறினார். மேலும், இந்திய அணியில் இடம்பிடிக்க, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற திறமையான வீரருக்கு அணியில் இடம் கிடைக்காதது கஷ்டமானது.
அணியின் நிலையும் அப்படிதான் உள்ளது. எங்களுக்கு நடுவரிசையில் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் தேவை. வீரர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களுக்கு அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
இஷான் கிஷனிடமும் நிறை முறை பேசியுள்ளேன் அவருக்கு மிடில் ஆர்டர் ஒத்துவரவில்லை. ஐபிஎல் தொடரிலும் சிரமப்பட்டார். தற்போது விராட்கோலியுடன் விளையாடும் போது நிறைய கற்று இருப்பார்.
இஷான் கிஷனுக்கு நெருக்கடி ஏற்பட நான் விரும்பவில்லை என தெரிவித்தார். இந்திய அணியை பொறுத்தவரையில் தற்போது திறமை வாய்ந்த இளம் வீரர்கள் அதிகமாகிவிட்டாதல் வாய்ப்புகள் சரியாக வழங்க பிசிசிஐ திணறி வருகிறது.
இதனால், அனுபவமிக்க வீரர்களுக்கு வாய்ப்பும் குறைவாக கிடைக்கிறது. ஒவ்வொரு வீரரும் கிடைத்த போட்டியை நன்கு பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே நிலை நிற்பார்கள் என முன்னாள் வீரர்களும் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.