கண்ணம்மாவுக்கு பாரதி வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் மனதில் ஓடுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியமான உண்மையை போட்டுடைக்க கண்ணம்மா காத்துக் கொண்டிருக்கையில் அவசர அவசரமாக ஹேமாவுடன் ஐதராபாத் கிளம்ப திட்டமிடுகிறார் பாரதி.
பாரதி கண்ணம்மா சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது கண்ணம்மாவின் பிறந்த நாள் எபிசோடுக்காக தான். கண்ணம்மா போட்ட சபத்தை நிறைவேற்றும் நாள் வந்துவிட்டது. லட்சுமி அப்பா யார்? என்ற உண்மையை ஊருக்கு சொல்ல போவதாக, அந்த நாளில் லட்சுமி அப்பா வீட்டுக்கு வருவார் என்றும் கண்ணம்மா சபதம் போட்டார். அதை நிறைவேற்ற பாரதியின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாய் கெஞ்சி விட்டார். ஆனாலும்பாரதி அந்த விழாவுக்கு வர மாட்டேன் என உறுதியாக கூறுகிறார். இந்த பக்கம் லட்சுமி அப்பாவின் வருகைக்காக ஸ்கூல் போகாமல் காத்துக் கொண்டிருக்கிறாள்.
சவுந்தர்யா, அகிலன் என மொத்த குடும்பமும் பாரதியிடம் பேசி விட்டது. ஆனாலும் பாரதி கண்ணம்மா பற்றி வழக்கம் போல் கேவலமாக பேசி விட்டு, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வரமாட்டேன் என்கிறார். அதுமட்டுமில்லை, இந்த விழாவுக்கு ஹேமாவும் செல்ல கூடாது என பிளான் செய்து, ஹேமாவை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாகஐதராபாத்கிளம்புகிறார். இந்த விஷயத்தை வெண்பாவிடம் சொல்லி விட்டார். வெண்பாவும் பாரதியை வழி அனுப்ப தயாராக இருக்கிறார். இந்த விஷயம் எப்படியோ சவுந்தர்யாவுக்கு தெரிய வர, அவர் ஹேமா மூலம் இந்த பிளானை கெடுத்து விடலாம் என நினைக்கிறார்.
ஹேமாவிடம் ஐதராபாத்துக்கு போக வேண்டாம் என்றும் இதுப்பற்றி பாரதியிம் பேசும்படி சொல்லி கொடுக்கிறார். காரணம், ஹேமா பேசினால் பாரதி பதில் பேச மாட்டார் என்ற கணக்கில் ஹேமாவை பேச சொல்கிறார். இந்த பக்கம் லட்சுமி நாளைய தினம் அப்பா வர போகிறார் என ஊர் முழுக்க சொல்லி கொண்டிருக்கிறாள். கண்ணம்மாவுக்கு பாரதி வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் மனதில் ஓடுகிறது. கடைசி நேரத்தில் பாரதி எதையாவது செய்ய போகிறார் என யோசித்து மறுபடியும் ஒருமுறை நேராக ஆஸ்பிட்டல் போய் பாரதியை பிறந்த நாள் கொண்ட்டாட்டத்திற்கு வரும்படி அழைக்கிறார்.
அதே போல் ஹேமாவும், பாரதியிடம் ஐதராபாத்துக்கு செல்ல வேண்டாம் என்கிறார். இதனால் பாரதி என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழம்பி நிற்கிறார். ஒருவேளை பாரதி பிறந்த நாள் விழாவுக்கு வந்தால் அன்றைய தினம் ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மா போட்டு உடைக்க தயாராக்விட்டார்.