சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் குறைந்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுவதால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கடந்த வாரத்தில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அப்படியே ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே அதைவிட அதிகமாக உயர்ந்துவிடுகிறது.
அந்தவகையில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்திருக்கிறது. இது தங்கத்தை வாங்க ஆர்வமாக காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. தற்போது தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும் மீண்டும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை 4,696 ஆக இருந்தது. அதேபோல் நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37,568 க்கு விற்பனையானது. இன்று ரூ.248 குறைந்து ஒரு சவரன் ரூ.37,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சென்னையில் 68.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.67.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.