சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ37,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. ஏதோ ஒரு நாள் தங்கத்தின் விலை குறையும்போது , அடுத்த நாளே பெரிய அளவில் விலை அதிகரித்து விடுகிறது.
அந்தவகையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்தது. நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.344 அதிகரித்திருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூளூம் அபாயம் இருப்பதால், உலகச்சந்தையில் தங்கத்தின் மீதான மூதலீடு அதிகரித்து வருவகிறது. ஆகையால் மேலும் தங்கம் விலை அதிகரித்த வண்ணமே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் மாறாக நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.344 உயர்ந்திருக்கிறது.
அந்தவகையில் சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4,695 ரூபாயாக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 37,560 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து ரூ. 4,738 க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,904 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் நேற்று ரூ68.60 க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 60 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி 69.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 69,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.