கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு டச்சஸ் ஒஃப் கார்ன்வால் கமிலா, சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக கிளாரன்ஸ் ஹவுஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது கணவர், வேல்ஸ் இளவரசர், கடந்த வியாழக்கிழமை வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததையடுத்து 74 வயதான டச்சஸ் ஒஃப் கார்ன்வால் கமிலாவுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கிளாரன்ஸ் ஹவுஸ் செய்தித் தொடர்பாளர், அவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள் என்று கூறினார்.
இதனிடையே டச்சஸ் ஒஃப் கார்ன்வால் கமிலா, கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் மூன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
பக்கிங்ஹாம்ஷையருக்குச் சென்றதுடன், மேற்கு லண்டனில் உள்ள ஹேவன் பேடிங்டன் பாலியல் வன்கொடுமைக்கான பரிந்துரை மையத்திற்குச் சென்ற கமிலா, ஷெப்பர்ட்ஸ் புஷ்ஷில் உள்ள ஊரிஷ் ஹப் சமூக சமையலறையைத் திறந்தார்.
இளவரசர் சார்லஸ் நேர்மறை சோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ராணியை சந்தித்தார். மருத்துவ தனியுரிமையை மேற்கோள் காட்டி, ராணி பரிசோதிக்கப்பட்டாரா என்பதை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தவில்லை. மேலும் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்று மட்டுமே கூறியுள்ளது.