கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா.
ஆய்வுகளின் படி, உணவு கலப்படங்கள் மிகவும் நச்சுத்தன்மையுடையவை. அவை இதய செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள் மற்றும் பலவற்றிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அதைத் தவிர்க்க, நாம் நம் உணவை நன்கு புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது முக்கியம்.
உங்கள் உணவு கலப்படமா இல்லையா என்பதைச் சரிபார்க்க சில வழிகள் மூலம் கண்டறிய முயற்சி செய்யலாம். அதன் தொடர்ச்சியாக, கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா. ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறைக்கான பழங்கால இந்திய வழிகாட்டியான சரக சம்ஹிதையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தின் படி, இது உடலின் உள் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இது பாரம்பரியமாக சுவாச நோய்களுக்கும், குடல் தொடர்பான நிலைமைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்களும் மிளகின் அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்பினால், அவை கலப்படமற்றவை என்பதை உறுதிசெய்ய, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.
செயல்முறை 1:
ஒரு தெளிவான கண்ணாடி கிளாசில் தண்ணீர் நிரப்பவும். சிறிதளவு கருப்பு மிளகை அவற்றில் போடவும் எடை காரணமாக கலப்படமில்லாத மிளகு தண்ணீரின் மூழ்கிவிடும். பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும்.
செயல்முறை 2:
ஒரு சிறிய அளவு கருப்பு மிளகை எடுத்து ஒரு மேஜையில் வைக்கவும். உங்கள் விரலால் மிளகை அழுத்தி பார்க்கவும். கலப்படமில்லாத மிளகுகள் எளிதில் உடைந்து போகாது கலப்படம் செய்யப்பட்ட மிளகுகள் எளிதில் உடைந்துவிடும்.