ஐபிஎல் மெகா ஏலத்தில் உதைபட போவது சிஎஸ்கேவும் மும்பையும் தான் என முன்பே கணித்தது தான். ஏனென்றால் இரு அணிகளுமே ஐபிஎல்லை மாறி மாறி ஆட்சி செய்த ராஜாக்கள். அந்த ராஜாக்கள் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்கள் கைதேர்ந்த சிப்பாய்களும் அவர்களை வழிநடத்தக் கூடிய தளபதிகளும் தான். இரண்டு அணிகளுமே அப்படியே செட்டாகிவிட்டார்கள். குறுக்க இந்த கௌசிக் வந்தா என்று சொல்வது போல மெகா ஏலம் வந்துவிட்டது.
இதனால் கனத்த இதயத்துடன் முக்கிய சாம்பியன் வீரர்களை கழற்றிவிட வேண்டிய கட்டாயத்திற்கு இரு அணிகளும் தள்ளப்பட்டன. அந்த வகையில் சிஎஸ்கே ருதுராஜ், ஜடேஜா, தோனி, மொயின் அலி ஆகியோரை மட்டும் தக்கவைத்து டுபிளெசிஸ், பிராவோ, ரெய்னா, தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என முக்கியமான வீரர்களை வெளியேற்றியது. இவர்கள் எல்லாம் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர். நினைத்து போலவே டுபிளெசிஸ் சிஎஸ்கேவை விட்டு கைநழுவி போனார். பெரிய விலைக்கு போனதால் (ரூ.7 கோடி) அவரை ஆர்சிபிக்கு தாரை வார்த்தது சிஎஸ்கே.
ரெய்னாவை சிஎஸ்கே உட்பட எந்த ஒரு அணியும் சீண்டவில்லை. இதனால் அவர் ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. அவருடைய மோசமான ஃபார்மே இதற்குக் காரணம். இருப்பினும் கடந்த ஐபிஎல் டைட்டிலை அடிக்க காரணமாக இருந்த “கேமியோ” ஆட்டம் ஆடிய உத்தப்பாவை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு அப்படியே சிஎஸ்கே தக்கவைத்தது. அதேபோல டான்ஸர், சிஎஸ்கேவின் சாம்பியன் பிராவோவையும் சிஎஸ்கே விடாப்பிடியாக நின்று ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. தாக்கூர், சஹாரை கைகழுவுமா, திரும்ப எடுக்குமா என இன்னும் சிறிதூ நேரத்தில் தெரிந்துவிடும்.