வேல்ஸில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம், எதிர்வரும் மார்ச் இறுதிக்குள் இரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று வீதங்கள் குறைவது அதன் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை எளிதாக்கத் தொடங்கும் என வேல்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
பெப்ரவரி 18ஆம் திகதி முதல் பொழுதுபோக்கு இடங்கள், இரவு விடுதிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்கான கொவிட் கால அனுமதி பத்திரங்கள் இனி தேவைப்படாது.
மேலும், மாணவர்கள் பெப்ரவரி 28ஆம் திகதி முதல் வகுப்பில் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை மற்றும் பாடசாலைகள் தங்கள் விதிகளை முடிவு செய்யலாம்.
பெரும்பாலான பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம், பெப்ரவரி 28ஆம் திகதி முதல் தளர்த்தப்படும்.
கடைகள், பொதுப் போக்குவரத்து, சிகையலங்கார நிலையங்கள், சலூன்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பு ஆகியவற்றில் இன்னும் அவை தேவைப்படும் என்றாலும், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களில் அவை இனி தேவைப்படாது.