கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் திரைப்படம் நேற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது. விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருந்த இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
மகான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தனக்குப் பிடித்தமானவர்களின் படங்களை உடனடியாக பார்த்து, பார்த்த கையோடு பாராட்டுக்களை தெரிவிப்பது ரஜினியின் வழக்கம். கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை தனது தலைவர் என்று அவரை வைத்து பேட்ட படம் எடுப்பதற்கு முன்பிலிருந்தே கூறிவருகிறார். ரஜினி என்று குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் தலைவா என்றுதான் அவர் இதுவரை குறிப்பிட்டு வந்திருக்கிறார். ரஜினியை வைத்து அவர் விரைவில் படம் இயக்குவார் என்ற யூக செய்தி எப்போதும் மீடியாவில் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட ஹார்ட்கோர் ரசிகனின் திரைப்படத்தை ரஜினி பார்க்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் திரைப்படம் நேற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது. விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருந்த இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தைப் பார்த்த ரஜினி, கார்த்திக் சுப்பராஜை தொலைபேசியில் அழைத்து, எக்சல்லெண்ட் மூவி… சூப்பர்ப் பெர்பாமன்ஸ்… பிரில்லியன்ட்… என்று பாராட்டியிருக்கிறார். இதனை சமூகவலைதளத்தில் தெரிவித்திருக்கும் கார்த்திக் சுப்பாராஜ், “ஆம்… தலைவர் லவ்டு மகான்….” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்ற வருடம் தமிழில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகின. முக்கியமாக மண்டேலா, கர்ணன், சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், ரைட்டர் என பல திரைப்படங்கள் மாநில எல்லைகளைக் கடந்து ரசிகர்களின், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றன. இதில் சார்பட்டா பரம்பரை, ரஜினியை வைத்து கபாலி, காலா என இரு படங்களை இயக்கிய இரஞ்சித் இயக்கிய திரைப்படம். ரைட்டர் இரஞ்சித் தயாரித்தது. இத்தனை நல்ல திரைப்படங்கள் வந்தும் ரஜினி அவை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதில் ரசிகர்களுக்கும், திரைத்துறையினருக்கும் வருத்தம்தான். மகானை பாராட்டியிருப்பதன் மூலம் அந்த வருத்தத்தை சூப்பர் ஸ்டார் போக்கியிருக்கிறார்.