கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறை சோதனைக்குப் பிறகு சுயமாக தனிமைப்படுத்தப்பட்ட வேல்ஸ் இளவரசர் சார்லஸ், இரண்டு நாட்களுக்கு முன்பு வின்ட்சரில் ராணியை சந்தித்தார் என்று அரச வட்டாரம் கூறுகிறது.
மருத்துவ தனியுரிமையை மேற்கோள்காட்டி, பக்கிங்ஹாம் அரண்மனை, ராணிக்கு நேர்மறை அல்லது எதிர்மறை சோதனை செய்ததா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரியின் கூற்றுப்படி, ராணி கொவிட் -19 இன் அறிகுறிகளைக் காட்டவில்லை, ராணி உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
ராணி வைரஸுக்கு பரிசோதிக்கப்பட்டாரா என்பதை அந்த அதிகாரி கூறவில்லை, வியாழக்கிழமை நேர்மறை சோதனை செய்த சார்லஸ் எப்போது அவருடன் கடைசியாக தொடர்பு கொண்டார் என்பது பற்றிய குறிப்பிட்ட விபரங்களை அவர் வழங்கவில்லை.
அரண்மனை அதிகாரியின் கூற்றுப்படி, 95 வயதான ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் இளவரசர் சார்லஸ் பங்கேற்றிருந்தார்.
எலிசபெத் தனது கணவர் இளவரசர் பிலிப்புடன் வின்ட்சர் கோட்டையில் ஜனவரி 2021இல் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றார். அரண்மனை அடுத்தடுத்த தடுப்பூசி அளவை உறுதிப்படுத்தவில்லை.
நேற்று (வியாழக்கிழமை) காலை நேர்மறை சோதனை செய்த, 73 வயதான இளவரசர் சார்லஸூக்கு, கொரோனா வைரஸின் அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் சார்லஸ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் கடந்த டிசம்பரில் கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முந்தைய நாள் மாலை, அவரும் டச்சஸ் ஒஃப் கார்ன்வால் கமிலாவும், திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் மற்றும் பிறரை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஒரு வரவேற்பறையில் சந்தித்தனர்.
ஆனால், கமிலாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
இளவரசர் சார்லஸ் , இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததால் ஏமாற்றமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு தங்கியுள்ளார் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.