இனிப்பா ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்குமே என யோசித்தால் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க… அதுவும் பத்தே நிமிடத்தில் செய்து சாப்பிடலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது.
இனிப்பா ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்குமே என யோசித்தால் பாசி பருப்பு பாயாசம் செஞ்சு சாப்பிடுங்க… அதுவும் பத்தே நிமிடத்தில் செய்து சாப்பிடலாம். இது உடல்நலத்திற்கும் நல்லது.
தேவையான பொருட்கள்
பாசி பருப்பு – ஒரு கப்
பச்சரிசி – கால் கப்
வெல்லம் – அரை கப்
நெய் – 2 ஸ்பூன்
முந்திரி திராட்சை – கால் கப்
செய்முறை
பாசி பருப்பை கடாயில் வறுத்துக்கொள்ளவும். அதை குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும். பச்சரிசியை மைய கால் கப் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். வெல்லத்தை உருக்கிக்கொள்ளுங்கள்.
பருப்பு வெந்ததும் பச்சரிசி தண்ணீரை ஊற்றி கிளறவும். உருக்கிய வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். கெட்டியான பதம் வரும் வரைக் கொதிக்க விடவும்.
இறுதியாக நெய் விட்டு முந்திரி சேர்த்து வதக்கி பாயாசத்தில் ஊற்றிக் கிளறவும். பாசி பருப்பு பாயாசம் தயார்.