பிரபல இசையமைப்பாளாரான இளையராஜா சென்னையில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த இருக்கிறார். என தகவல் வெளியாகியுள்ளது…
இன்றும் இனிமையான காதல் பாடல் என்றாலே இளையராஜாதான். தாலாட்டிலிருந்து துக்கம் வரை எதுவானாலும் இளைய ராஜா பாடல்கள் தான். 80ஸ்,90ஸ், 20ஸ் என வருடங்கள் உருண்டோடினாலும் இசையின் ரசம் என்றும் குறைவதில்லை.
1970கள் துவங்கி திரைதுறையில் இசையின் ராஜாவாக கொடிநாட்டி வருகிறார் இசைஞானி இளையராஜா இதுவரை 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழில் நட்சத்திரம் நகர்கிறது, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
7ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை தன சொந்த இசையில் கொடுத்த இசைஞானி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் 20,000 க்கும் அதிகமான மேடைக் கச்சேரிகளை இளையராஜா நடத்தி உள்ளார். பல லைவ் கச்சேரிகளை நடத்தி ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்துள்ளார் இளையராஜா.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு இளையராஜாவின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இசை கொண்டாடும் இசை என்ற தலைப்பில் லைவ் கச்சேரி ஒன்றை நடத்தினார்.
2017 ல் நடந்த பிரச்சனைக்கு பிறகு எஸ்பிபி மற்றும் இளையராஜா இணைந்து நடத்திய இந்த இசைக்கச்சேரி கிட்டதட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2019 ல் கோவையிலும் முதல் முறையாக லைவ் கச்சேரியை நடத்தினார் இளையராஜா.
அதன் பிறகு கொரோனா காரணமாக மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்த இசைக் கச்சேரிகளை இளையராஜா ஒத்திவைத்தார்.
தற்போது மீண்டும் சென்னையில் இளையராஜாவின் இசைக்கச்சேரி நடத்தப்பட உள்ளது. Rock with Raaja என்ற தலைப்பில் இந்த லைவ் கச்சேரி மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை இளையராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.