230
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய எல்லை விடயத்தில் மேலும் முடிவுகளை விரைவில் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான முடிவுகளை எடுக்க தவறினால் இந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தில் மேலும் இடையூறு ஏற்படக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் வருவதால் இந்த ஆண்டு நிலைமை மோசமடையக்கூடும் என பாராளுமன்ற பொது கணக்கு குழு அறிவித்துள்ளது.
இருப்பினும் வணிக நிறுவனங்கள் ஐரோப்பாவுடன் திறம்பட வர்த்தகம் செய்வதற்குத் தேவையான ஆதரவைப் பெற்றுள்ளன என்பதை உறுதி செய்வதை அரசாங்கம் தொடர்ந்து கூறிவருகின்றது.
கொரோனா தொற்று குறைவதால் பிரித்தானிய எல்லையில் பயணிகள் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும்போது என்ன நடக்கும் என்பது குறித்து பொது கணக்கு குழு கவலை வெளியிட்டுள்ளது.