அரசு பேருந்து ஓட்டுநர்கள் இனி இதை செய்யக்கூடாது : போக்குவரத்துத் துறை விடுத்த எச்சரிக்கை…

by Column Editor

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்மைக் காலமாக தமிழக போக்குவரத்துத் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. உதாரணமாக மாற்றுத்திறனாளி பயணிகளை அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அவர்களிடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், ஒரு மாற்றுத்திறனாளி பயணி இருந்தாலும் கட்டாயம் அவரை பேருந்தில் ஏற்றிச் செல்ல வேண்டும், அவர்களுக்கு இருக்கை வசதிகளை செய்து தர வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

அதேபோல் நெடுஞ்சாலையோர உணவங்களில் தரமற்ற உணவுகள் விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் , தமிழகம் முழுவதும் உள்ள மோட்டல்களில் அதிரடி சோதனையை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் அரசுப் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிற்க வேண்டும் என்ற பட்டியலையும் வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Related Posts

Leave a Comment