கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணி விருப்பம்!

by Column Editor

கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய எதிர்காலத்தில் அவர் ‘கமிலா மகாராணி’ என அழைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணியாரின் விருப்பம் குறித்து வெளியான தகவல் அரச குடும்பத்தை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாகப் பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எலிசபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முடி சூடியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment