உணவில் அதிகமாக காரம் சேர்த்துக்கொண்டால் வரும் பிரச்சனைகளை பற்றி தெரியுமா..?

by Column Editor

காரம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிட்ட பிறகு பலருக்கு வயிறு மற்றும் மார்பில் தொடர்ந்து எரிச்சல் இருக்கும். அதிக காரமான உணவை உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது.

பலரும் இன்று காரசாரமான உணவைதான் விரும்புகிறார்கள். நாவூறும் சுவையில் இருக்கும் இந்த உணவுகளுக்கு காரம் சேர்பதில் முதன்மையானது சிவப்பு மிளகாய்தான். மிளகாய் தூள் இல்லாத குழம்பும் இந்திய சமையலில் இல்லை. எதுவாயினும் ஒரு லிமிட் வேண்டும் என்பதுபோல் காரம் சுவையை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவும் ஆபத்துதான். அப்படி அதிகமாக சிவப்பு மிளகாய் பொடியை பயன்படுத்துவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

காரம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிட்ட பிறகு பலருக்கு வயிறு மற்றும் மார்பில் தொடர்ந்து எரிச்சல் இருக்கும். அதிக காரமான உணவை உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது. அப்படி சிவப்பு மிளகாய் பொடியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி பார்ப்போம்.

வயிற்றுப்போக்கு :

சிவப்பு மிளகாய் பொடியை உணவில் அதிகம் பயன்படுத்தினால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். உண்மையில், காரமான உணவுகள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழிக்கின்றன. இதனால் செரிமானம் கெடுகிறது. சிவப்பு மிளகாயை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற நோய்க்கு ஆளாக நேரிடும். இது தவிர சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவதால் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

வாய் புண் :

மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். வாயில் காரத்தால் வெப்பம் அதிகரிக்கிறது, அதனால் வாயில் எரிச்சல் அதன் தொடர்ச்சியாக புண்களும் ஏற்படலாம்.

சுவாச பிரச்சனைகள் :

சிவப்பு மிளகாய் தூள் அதிகமாக சாப்பிடுவது ஆஸ்துமா நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு ஆஸ்துமா அல்லது ஏதேனும் சுவாச நோய் இருந்தால், மிளகாய்த்தூள் அதிகமாக உட்கொள்வதை தவிருங்கள். சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது ஆஸ்துமா தாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அதே சமயம் காரமான உணவுகளை அதிக நேரம் சாப்பிடுபவர்களுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அதிக காரம் உடலின் நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

குறைப்பிரசவத்தின் ஆபத்து :

ஆச்சரியமாக இருந்தாலும் இதுதான் உண்மை. சிவப்பு மிளகாய் பொடியை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, முன்கூட்டிய பிரசவத்தின் அபாயம் அதிகரிக்கிறது. அதுமட்டுமன்றி கர்ப்ப காலத்தில் சிவப்பு மிளகாயை அதிகம் சாப்பிடுவது குழந்தைக்கு சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

வயிற்றுப் புண் பிரச்சனை :

சிவப்பு மிளகாய் பொடியை அதிகமாக சாப்பிடுவது உங்கள் வயிற்றில் புண்களை ஏற்படுத்தும். இந்த நோய் உங்களுக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம். சிவப்பு மிளகாயில் அஃப்லாடாக்சின் என்ற வேதிப்பொருள் காணப்படுவதால் வயிறு, கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

Related Posts

Leave a Comment