ஐ.டி.சி. லாபம் ரூ.4,156 கோடி.. இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு

by Column Editor

ஐ.டி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,156.20 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமும், நுகர்பொருள் உள்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனமுமான ஐ.டி.சி. தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,156.20 கோடி ஈட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 12.7 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஐ.டி.சி. தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.3,687.88 கோடி ஈட்டியுள்ளது.

2021 டிசம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் (கலால் வரி தவிர்த்து) ரூ.15,862.32 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 32.5 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனம் தனிப்பட்ட முறையில் வருவாயாக ரூ.11,969 கோடி ஈட்டியிருந்தது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, இந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.5.25 வழங்குவதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, ஐ.டி.சி. நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.06 சதவீதம் குறைந்து ரூ.234.15ஆக இருந்தது.

Related Posts

Leave a Comment