பிக்பாஸ் அல்டிமேட் என்று பெயரிடப்பட்டு நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ஆரம்பித்து 5 நாட்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் சண்டையும், சச்சரவும்தான் அதிகமாக உள்ளது.
கடந்த 5 நாட்களாக எந்தவித தடங்கலுமின்றி 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் லைவ் ஸ்ட்ரீமிங் இன்று திடீரென நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் இது ப்ரீ ரெக்காடர்ட்டு ஷோ தான் என்பதால், தொழில்நுட்ப கோளாறு எப்படி வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஒரு வேளை பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே ஏதேனும் பிரச்சனை வந்ததால் லைவ் ஸ்டிரீமிங்கை நிறுத்து வைத்துள்ளார்களா என ரசிகர்கள் சந்தேகித்து வருகிறார்கள். விரைவில் இதுகுறித்து பிக்பாஸ் குழு விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.