கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 84 சதவீதமானோருக்கு, தடுப்பூசி அளித்துள்ளதாக வேல்ஸ் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மந்த கதியில் நகரும் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள், கிறிஸ்மஸுக்கு முன்பிருந்தே மெதுவாக உள்ளது. கடந்த வாரத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,814 பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிகப்பட்சமான கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி 50,524 டோஸ்கள் வழங்கப்பட்டன.
கடந்த வாரத்தில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளில் 61 சதவீதம் பூஸ்டர் தடுப்பூசிகள் ஆகும். அதே சமயம் கிட்டத்தட்ட 8,500 இரண்டாவது டோஸ்கள் முக்கியமாக 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு வழங்கப்பட்டன.
பெப்ரவரி 3ஆம் திகதி இந்த எண்ணிக்கை ஸ்கொட்லாந்தில் 84 சதவீதம், இங்கிலாந்தில் 81 சதவீதம் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 76 சதவீதமாக இருந்தது.
மீதமுள்ள தகுதியுள்ள நபர்களைச் சென்றடைய, தற்போதைய வீதத்தில், ஏழு மாதங்களுக்கு மேல் ஆகும். மொத்தம் 1,895,710 பூஸ்டர்கள் மற்றும் மூன்றாவது டோஸ்கள் பெப்ரவரி 2ஆம் திகதிக்குள் வழங்கப்பட்டன.
இவர்களில் 18 முதல் 29 வயதுடையவர்களில் 38 சதவீத பேர் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 45 சதவீத பேர் உள்ளனர்.