பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.
தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த வார எவிக்ஷனுக்காக நிரூப், சினேகன், அனிதா, சுருதி, ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
இதில் தற்போது வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய் ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். இவர்கள் மூவரில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு தான் குறைந்த அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா ஏடாகூடமாக பேசி சண்டையிட்டு வந்தாலும், ஏதாவது ஒரு பிரச்சனையை கொளுத்திப்போட்டு சண்டையை மூட்டி விடுவது சுரேஷ் சக்ரவர்த்தி தான். அவரின் இந்த யுக்தி ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால், தான் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.