தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த உண்மை தெரிந்து விட்டது.
இந்த வாரம் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு வித்தியாசமாக நிஜ கல்யாணம் போல், நிஜமான பத்திரிக்கை எல்லாம் அடித்து விளம்பரப்படுத்தியுள்ளது சீரியல் குழு.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில் வார நாட்களில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகர் தீபக் நீண்ட காலத்திற்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவரின் கம்பேக்கும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை வாங்கி தந்துள்ளது. ஒளிப்பரப்பாக தொடங்கிய சில மாதத்திலே சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் திருமணத்திற்கு, கோதை அம்மாவிடம் சம்மதம் பெறப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. அதே போல, கோதை அம்மாவுக்கு தமிழும் சரஸ்வதியும் காதலித்துத் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதும் தெரியாது. அவரைப் பொறுத்தவரை இவர்களின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
வழக்கம் போல எல்லா சீரியல்களிலுமேதிருமணம் நடைபெறுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று வில்லன் அல்லது வில்லி திட்டமிடுவார். அதே போல, தமிழ் மற்றும் சரஸ்வதி திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என வில்லி திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்.
கடந்த வாரம் சரஸ்வதி அதிகம் படிக்கவில்லை என்ற உண்மை தெரிந்தது போன்ற புரோமோ வெளியாகி திருமணம் நின்று விடுமோ என்று காட்சிகள் இருந்தன. விஜய் டிவி தனது சமூக வலைத்தள கணக்குகளில் பகிர்ந்த பத்திரிக்கையைப் பார்த்து ‘செவ்வாய்க்கிழமை எப்படி திருமணத்தை நடத்துவார்கள்’ நெட்டிசன்கள் ஏற்கனவே கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது வெளியான இந்த வாரப் புரோமோ தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருமே காதலித்துத் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த உண்மை தெரிந்து விட்டது. காதல் திருமணம் தான் செய்து கொள்கிறார்கள் என்று வில்லி வெளிப்படுத்தும் காட்சிகள் புரோமோவில் உள்ளன.
ஆனால், கோதை அம்மா, தனக்கு அவர்களின் காதல் பற்றி முன்பே தெரியும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஒரு வேளை, சரஸ்வதி படிக்காத பெண் என்பதும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது! பொறுத்திருந்து பார்க்கலாம்.