வெங்காயம் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்தாக இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.
வெங்காயம் சாறினை தலை முடிக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர செய்கின்றது.
சிறிதளவு சிறிய வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பின் அரைத்த இந்த கலவையை ஒரு பவுலில் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். வெங்காயம் சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை, என்று 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர 1/4 கப் வெங்காயம் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பின் 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டும். இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கடைப்பிடித்து வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
கறிவேப்பிலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வலிமையான மற்றும் கருமையான முடியினை வளர செய்யும். எனவே ஒரு கையளவு கறிவேப்பிலையை நன்கு மைபோல் அரைத்து கொள்ளவும். பின் அரைத்த கறிவேப்பிலையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் நன்றாக அப்ளை செய்து, ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பின் ஷாம்பு போட்டு தலை முடியை அலச வேண்டும்.