எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. 6,999 எம்பிபிஎஸ் மற்றும் ஆயிரத்து 930 பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன. முதல நாள் கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகள் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைப்பெற்றது.
முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி ஆணை பெற்றனர். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைதுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட,எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசால் உருவாக்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டாலும், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஆணையாலும் இந்தாண்டு 500க்கும் மேற்ப்பட்ட ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிருப்பதில் மட்டட்ற்ற மகிழ்ச்சி. pic.twitter.com/SePo6sRs4B
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 30, 2022
இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கிட,எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசால் உருவாக்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டாலும், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற ஆணையாலும் இந்தாண்டு 500க்கும் மேற்ப்பட்ட ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகிருப்பதில் மட்டட்ற்ற மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.