குழாயடி சண்டையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தெருவிற்கு இழுக்கும் அளவிற்கு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், நாப்கின் கேட்டு வாங்க கூச்சப்படுவார்கள். இந்தியப் பெண்களின் வாழ்க்கை சற்று முரண்பாடுதான். காரணம் வளர்ந்த விதம் மற்றும் சமூக ஒடுக்குமுறை. பெண்களின் டார்க் சீக்ரட்கள் என்ன ?
செல்ஃபி
பெண்களில் செல்ஃபிக்களுக்கு சமூக வலைதளங்களில் ஆண்கள் வாவ் மற்றும் ஹார்ட் ஸ்மைலி போடுகின்றனர். ஆனால் ரசிக்கும் அந்த செல்ஃபிக்குப் பின்னால் ஏராளமான செல்ஃபிக்கள் ரகசியமாக இருக்குமாம். அவற்றை ஃபில்டர் எடிட்டிங் எல்லாம் செய்து பதிவிடும் வரை அவை ரகசியங்கள் தான்.
பார்ன்
ஆண்கள் மட்டும் தான் பார்ன் பார்ப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு உலகிலேயே பார்ன் பார்க்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் பார்ன் பார்ப்பதை மிகவும் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள்.
What do you know about the stir of Indian women?
துன்புறுத்தல்
இந்திய பெண்கள் அதிகம் இரகசியமாக வைத்துக் கொள்வது கற்பழிப்பு, தகாத முறையில் தீண்டுதல், தவறான பேச்சு உள்ளிட்டவற்றைத்தான். கூறினால் வேலைக்கு போக வேண்டாம், கல்லூரிக்கு போக வேண்டாம் என்று தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சம். நீதி கேட்டு குரல் உயர்த்த வேண்டிய இடத்தில், இரகசியமாக மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து விடுகிறார்கள்
உறவு!
பெண்கள் எதிர்பார்ப்பது காதல், அக்கறை, அரவணைப்பு, மரியாதை. ஆனால், அவர்களை இச்சை, உறவு, தாம்பத்தியம், கொஞ்சி, குலவுதல் போன்றவற்றுக்கு காதல் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் தான் அதிகம். உறவுகளில் தாங்கள் ஏமாற்றப்படுவதை,பெண்கள் அதிகம் வெளியே கூறுவதில்லை.
சினிமா
ஆண், நண்பர்களுடன் சினிமா சென்று வருகிறேன் என்று கூறுவது இயல்பு. அதுவே மகள் கூறினால் வசவுதான் கிடைக்கும். இதனால் சினிமாவிற்கு செல்வதில் இருந்து, பிறந்தநாள் பார்ட்டி, தோழிகளுடன் வெளியே செல்வது என எதுவாக இருந்தாலும் மூட்டை, மூட்டையாக பொய்களை கொட்டி விடுகிறார்கள்
டைரி
பல பெண்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். தினமும் எழுதாவிட்டாலும் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை எழுதி ரகசியமாக வைத்துக்கொள்கின்றனர்.
கடவுச்சொல்
எழுத்து, குறியீடு, எண்கள் என அனைத்தையும் கலந்து ஒரு ஸ்ட்ராங்கான கடவு சொல் வைப்பதில் வல்லவர்கள் பெண்கள். பெண்களின் மொபைலை அன்லாக் செய்வது கடினம்