பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சி வரும் 30ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமாக ஹாட்ஸ்டார் மற்றும் பிரபல ரிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
24 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியினை ஹாட்ஸ்டாரில் மக்கள் கண்டுகழிக்கலாம். இதில் போட்டியாளர்களாக இதுவரை பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற பிரபலங்கள் சிலர் பங்கேற்க உள்ளனர்.
இதில் யார் யார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முதல் போட்டியாளரான சினேகன் மற்றும் இரண்டாவது போட்டியாளராக ஜுலியும், மூன்றாவது போட்டியாளராக வனிதாவும், நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தியும், ஐந்தாவது போட்டியாளராக அபிராமியும் உள்ளே செல்ல உள்ளனர்.
தற்போது ஆறாவது செல்லும் போட்டியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. ஆம் ஆறாவது போட்டியாளராக தாடி பாலாஜி உள்ளே செல்வதை ஹாட்ஸ்டார் ப்ரொமோ மூலம் உறுதி படுத்தியுள்ளது.