இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 2.50 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,35,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 2,86,384 பேருக்கும் நேற்று 2,51,209 பேருக்கும் தொற்று உறுதியான நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது குறைந்துள்ளது. அதேபோல் நேற்று முன்தினம் 665 பேரும், நேற்று 627 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான நிலையில் இன்று பேர் 871 உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
அதேபோல் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்தில் 3,35,939 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதேசமயம் 20,04,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவை தடுக்க மிகப்பெரிய ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 1,65,04,87,260 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.