பொறியியல் மாணவர்கள் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்கள அனைவருக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதன்படி காலை மாலை என இருவேளைகளில் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அன்று நடைபெற தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்து இன்று காலை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 19 ஆம் தேதியன்று நடைபெற இருந்த பொறியியல் மாணவர்கள் முறையே மார்ச் மாதம் 5, 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பி.இ., பி.டெக்., இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணாவர்கள் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் தற்போது பதிவு செய்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.