50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளைக் கொண்ட இளையவர்கள் கொவிட்-19 தொற்றுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள், பற்றிய ஆய்வில் பங்கேற்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்களுக்கும் முந்தைய ஐந்து நாட்களில் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கும் இந்த ஆய்வு திறக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு வீட்டிலேயே சாப்பிட மாத்திரைகள் வழங்கப்படும்.
வைரஸ் தடுப்பு மருந்துகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை தீர்மானிக்க இந்த ஆய்வு உதவும் என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் சர் ஜொனாதன் வான்-டாம் கூறினார்.
சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் தகுதியுள்ள அனைவரையும் முன்னோக்கிச் செல்லவும் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக்கூடிய மருந்துகளைப் பற்றி மேலும் அறிய எங்களுக்கு உதவவும் கேட்டுக் கொண்டார்.