மில்க் மெய்டு பாயாசம்

by Column Editor

பால் வாசனை பிடிக்காதவர்கள் எவ்வளவு டேஸ்டாக பாயாசத்தை செய்து கொடுத்தாலும் தொட மாட்டார்கள்.

நம் வீடுகளில் விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள், திருமண விழாக்களில் கட்டாயம் இடம் பிடிக்கும் ஸ்வீட் என்றால் அது பாயாசம் தான். ஈஸியாக செய்யக்கூடியது அதே நேரம் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பாயாசத்தில் பல வகை உண்டு. சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், அரிசி பாயாசம், நூடுல்ஸ் பாயாசம் என பல வெரைட்டி உண்டு. அதே சமயம் பால் வாசனை பிடிக்காதவர்கள் எவ்வளவு டேஸ்டாக பாயாசத்தை செய்து கொடுத்தாலும் தொட மாட்டார்கள். ஆனால் அவர்களையும் சாப்பிட தோண வைக்கும் பாயாசம் தான் மில்க் மெய்டு. இந்த ரெசிபியை வழங்குபவர் பிரபல யூடியூப் சமையல் கலைஞரான சங்கீதா.

இவரின் குக் வித் சங்கீதா யூடியூப் சேனலில் பல வகையான ரெசிபி வீடியோக்கள் வெளியிடப்பட்டு அவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அதில் ஒன்று தான் இந்த மில்க் மெய்டு பாயாசம். மிகவும் வித்தியாசமான முறையில் டேஸ்டியாக இந்த பாயாசத்தை சங்கீதா செய்து காட்டுகிறார் வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பால், சர்க்கரை, சேமியா, முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய், நெய், மில்க் மெய்டு

செய்முறை:

1. முதலில் 2 ஸ்பூன் சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ள வேண்டும்.

2. பின்பு, கடாயில் நெய் ஊற்றி சேமியா, முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

3. இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்த பின்பு வறுத்த சேமியாவை அதில் சேர்க்க வேண்டும்.

4. ஒரு கொதி வந்ததும் அதில்சர்க்கரையை சேர்க்க வேண்டும். அது கரைந்ததும் 2 ஸ்பூன் நெய்யை அதில் ஊற்ற வேண்டும்.

5. இப்போது ஏலக்காய் பவுடரை அதில் சேர்க்க வேண்டும். 2 நிமிடம் கொதிக்க பின்பு அதில் மில்க் மெய்டை சேர்க்க வேண்டும்.

6. பாலுடன் மில்க் மெய்டு சேர்ந்து கொதித்து வந்ததும் அதில் வறுத்த முந்திரி, பாதாம் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பிறகு பாயாசம் பதத்தில் இறக்கினால் சூப்பரான டேஸ்டான சேமியா மில்க் மெய்டு பாயாசம் தயார்.

Related Posts

Leave a Comment