முழு ஊரடங்கிலும் வடபழனி முருகன் கோயிலில் நேற்று திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் பணியாளர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
108 சிவாச்சாரியர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டும் கும்பாபிஷேக விழாவில் அனுமதிக்கப்பட்டார்கள். வடபழனி கோவில் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரலையில் ஒளிபரப்பானது. அத்துடன் வடபழனியில் இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் விழாயன் கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.
வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே 2,000க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள். நேற்று முழு ஊரடங்கு என்பதால் குடமுழுக்கை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை வடபழனி முருகன் கோயில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.